பிரபல நடிகருக்கு 5 வயது மகள் போட்ட கண்டிஷன்..

Must read

டிகர் பிரித்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ படப்பிடிப்புக் காக ஜோர்டன் நாட்டுக்கு சென்று கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் சிக்கிக்கொண்டார். அவரையும் குழுவினரையும் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தனர்.


கேரள வந்த பிரித்விராஜ் படத்துக்காக வளர்த்த தாடியை மழித்துவிட்டு குடும்பத்துடன் ஐக்கிய மானார். ஆனாலும் அவர் படக் குழுவினருடன் செல்போனில் அடிக்கடி படம் பற்றி விவாதிக் கிறார். அதைக்கண்ட அவரது 5 வயது மகள் அலங்கிரிட்டா பேப்பர், பென்சில் எடுத்து அதில் சில வரிகளை எழுதி கொடுத்தார். அதை வாங்கிப்படித்த பிரித்வியும் அவரது மனைவி சுப்ரியாவும் ஷாக் ஆகினர்.


’அம்மா, அப்பாவுக்கு உங்களுக்கு என்னுடைய கண்டிஷன் இது. நீங்கள் இருவரும் போன்களை கையில் தொடக் கூடாது. என்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் கவனிக்கக் கூடாது’ என கூறியி ருக்கிறார். குழந்தையின் இந்த கடிதத்தை பிரித்வியின் மனைவி வெளியிட்டிருக்கிறார். அதைக்கண்ட ரசிகர் ஒருவர், ’அழகு கண்டிஷன்’ என்று குழந்தையை பாராட்டி உள்ளனர்.

 

More articles

Latest article