டிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். பேட்ட படத்திலும் நடித்திருந்தார். மாளவிகாவுக்கு நேற்று பிறந்த தினம் அவருக்கு மாஸ்டர் பட குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். அவரை வாழ்த்தி போஸ்டரும் வெளியிட்டனர். அதற்கு நன்றி தெரிவித்திருந்தார் மாளவிகா. ரசிகர்களும் ஏராளமானவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


ஒரு ரசிகர்,’உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார்? எந்த இயக்குனருடன் பணியாற்ற விரும்புகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த மாளவிகா அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் படத்தை வெளியிட்டு, ’எனக்கு பிடித்த இயக்குனர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க ஆசை’ என்று கூறினார்.
வெற்றி மாறன் அடுத்து சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படம் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.