கோரக்பூர்  ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதன் பின்னணி : மருத்துவமனை தலைவர்

கோரக்பூர்

பாபா ராக்தேவ் தாஸ் மெடிகல் காலேஜ் முதல்வர் ஆக்சிஜன் சப்ளை விற்பனையாளரால் நிறுத்தப்பட்டது ஏன் என்பதின் முழுத்தகவலை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு பணம் கொடுக்காததால் சப்ளை நிறுத்தப்பட்டு அதனால் கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகள் மரணம் அடைந்தது தெரிந்ததே.   இது குறித்து பிரதமர் மோடி, வருத்தம் தெரிவித்ததுடன் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேலை நிலைமையைக் கண்டறிய அனுப்பி வைத்தார்.   இது குறித்து உ. பி முதல்வர் யோகி ஆதித்யாவையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

ஆனால் உத்திரப் பிரதேசத்தை ஆளும் பா ஜ க அரசு இந்த மரணங்கள் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டது என்பதை மறுத்துள்ளது.   மேலும், அந்த மருத்துவமனையில் இது வரை நிகழ்ந்த குழந்தைகள் மரணம் சென்ற வருடத்தை விடக் குறைவு என பல புள்ளி விவரங்களைக் கொடுத்துள்ளது.    ஆக்சிஜன் சிலிண்டருக்கான 2014 ஒப்பந்தத்தைப் பற்றி மற்றொரு விசாரணை நடத்துமாறு அரசு ஆணையிட்டுள்ளது.

உத்திரப் பிரதேச முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், மற்றும் மருத்துவக்கல்வி அமைச்சர் ஆகிய மூவரும் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள்.   அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜிவ் மிஸ்ரா சிலிண்டருக்கான பணம் வேண்டி ஆகஸ்ட் 4ஆம் தேதிதான் கோரிக்கை விடுத்தார் எனவும்,  அந்தப் பணம் அவருக்கு 5ஆம் தேதியே அனுப்பப் பட்டு விட்டது எனவும் தெரிவித்தனர்.   அரசு தனது கடமையை உடனடியாக செய்தும் மருத்துவமனை நிர்வாகம் தேவையின்றி பணம் கொடுக்காமல் தாமதித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து டாக்டர் மிஸ்ரா என் டி டிவி தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.  அதில் அவர் கூறியதாவது :

“இதுவரை நான் அரசுக்கு மூன்று கடிதங்கள் பணம் தர வேண்டியது பற்றி எழுதியுள்ளனர்.   இது தவிர வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும் இந்த பணம் பாக்கியைப் பற்றி அரசுக்கு தெரிவித்துள்ளேன்.   ஆனால் எனது மூன்றாவது கடிதம் மட்டுமே இப்போது சொல்லப் படுகிறது.   அதற்கு முன் எழுதிய இரண்டு கடிதங்களுக்கும் பதில் இல்லை.   எனக்கு பணம் சரியான நேரத்தில் வந்து சேராததால் என்னால் அந்த நிறுவனத்துக்கு பாக்கியை செலுத்த முடியவில்லை.   பணம் தர ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் ஒப்புதல் வழங்கப்பட்டது.   பல சட்டவிதிகளின் காரணமாக என்னால் ஆகஸ்ட் 11ஆம் தேதி தான் பணம் அந்த நிறுவனத்துக்கு வழங்க முடிந்தது.  இதில் எனது தவறு ஏதும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பில், மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் மிஸ்ரா ரிஷிகேஷ் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.   அதற்கு அவர், “நான் முறையாக முன் கூட்டியே அறிவித்து விட்டுத்தான் விடுப்பு எடுத்துள்ளேன்.  மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எனக்கு இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாதது குறித்து தகவல் அனுப்பியதும், நான் ரிஷிகேஷில் இருந்தபடியே இங்கு சிலிண்டர்கள் கிடைக்க ஆவன செய்துள்ளேன்: என கூறினா

மிஸ்ரா பணி நீக்கம் செய்யப்பட்டதும், அதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததும்,  அந்த ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதும் தெரிந்ததே
English Summary
Principal reveals Secret behind the stoppage of oxygen cylindr in Gorakhpur hospital