உச்சநீதிமன்ற விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்…..சுப்ரமணியன் சுவாமி

டில்லி:

உச்சநீதிமன்ற விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. ஜனநாயகம் இல்லை என கூட்டாக பேட்டியளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடியும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னை விலக்கிக்கொள்கிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறுகையில் “அவர்களை நாம் விமர்சனம் செய்ய முடியாது. அவர்கள் அதிக கண்ணியம் கொண்டவர்கள். அவர்கள் அதிகமான சட்ட வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் போன்று சம்பாதிக்க முடியாது.

அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நான்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதி என உச்சநீதிமன்றத்தின் அனைத்து தரப்பும் ஒருமித்த கருத்திற்கு வந்து தொடர்ந்து செயல்பட பிரதமர் மோடி உறுதிசெய்ய வேண்டும்,” என்றார்.

Tags: Prime Minister should intervene in the matter of Supreme Court says Subramanian Swamy, உச்சநீதிமன்ற விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.....சுப்ரமணியன் சுவாமி