சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஜனாதிபதி பதக்கம்! மத்தியஅரசு அறிவிப்பு

சென்னை:

சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் சென்னை மாநகர காவல்ஆணையர் விஸ்வநாதனுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் பதக்கம் ஆகியவை ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மத்திய, மாநில காவல் துறைகள், மத்திய காவல் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் உள்ளிட்டவைகளில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம்,  சென்னை மாநகர காவல்ஆணையர் விஸ்வநாதன், மேலும் கூடுதல் ஆணையர் சேஷசாயி, கூடுதல் எஸ்பி சி.ராஜாவுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
English Summary
Presidential Medal for Chennai Police Commissioner Central Government Announcement