புதுடெல்லி:
சராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தசரா புனித நிகழ்வை முன்னிட்டு, இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள மக்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தீமையை நன்மை வென்றதை இந்தப் பண்டிகை குறிக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு விதங்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை இது வலுப்படுத்துவதோடு, ஒற்றுமையோடு வாழ்ந்து தீமைகளைத் தவிர்த்து நன்மைகளை செய்யுமாறு நம்மை ஊக்குவிக்கிறது.மரியாதை புருஷோத்தமரான ஸ்ரீ ராம பிரானின் வாழ்வோடும், ஒழுக்கங்களோடும் இந்தப் பண்டிகை தொடர்புடையது ஆகும். ஒழுக்கம் மற்றும் நேர்மையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக ராமரின் வாழ்வு திகழ்கிறது.இந்தப் பண்டிகை நமக்கெல்லாம் மகிழ்ச்சியை வழங்கி, தற்போதைய பெருந்தொற்றின் தீய விளைவுகளில் இருந்து நம்மை காத்து, நாட்டு மக்களுக்கு வளத்தையும், செழிப்பையும் தரட்டும்” என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.