கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஹைதராபாத்தைத்  தலைமையிடமாக கொண்ட பயோலாஜிக்கல் ஈ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளதாக கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் Biological E Limited – உம் ஒன்றாகும். அது மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பினால் முடிவு செய்யப்பட்ட,  வரையறுக்கப்பட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு தடுப்பு மருந்து தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை போன்ற பிற நிறுவனங்கள் – சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, காடிலா ஹெல்த்கேர், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட், பயோலாஜிக்கல் இ லிமிடெட், ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட், ஆர்பிண்டோ பார்மா லிமிடெட், மற்றும் ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் போன்றவை.

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இது இதைப் போன்ற ஒரு மருத்துவ நடைமுறையை ஏற்கனவே ரேபிஸ், ஹெப்படைடிஸ் பி, வேக்சினியா வைரஸ், டெட்டனஸ், பொட்டூலிசம் மற்றும் டிப்தீரியா உள்ளிட்ட பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைக் கட்டுப்படுத்த  முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளன கூறியுள்ளது. “COVID – 19 ஐ கொண்ட நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா இதேபோன்ற நோக்கத்திற்கு உதவும் என்றாலும், ஆன்டிபாடிகளின் சுயவிவரம், அவற்றின் செயல்திறன் மற்றும் செறிவு ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்கு மாறுபடும், எனவே இது சிகிச்சை அல்லது தடுப்பு நோக்கத்திற்கு நம்ப இயலாததாகவும் இருக்கிறது” என்று ஐசிஎம்ஆர் கூறியது.

ஐசிஎம்ஆர் இதைப்பற்றி மேலும் கூறுகையில், “எக்வைன் செரா அடிப்படையிலான சிகிச்சை முறை மூலம் அடையக்கூடிய தரப்படுத்தல், கோவிட் 19 காலத்தில் ஐசிஎம்ஆரால் நிர்வகிக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக விளங்குகிறது.” என்றது.