பிரேம்ஜிக்கு கேமரான்னா கூச்சம்… முதன் முதலாக காமிரா முன் நின்ற அனுபவம் குறித்த சுவாரஸ்ய தகவல்…

Must read

இசையமைப்பாளர் கங்கையமரனின் இரண்டு மகன்களில் இளையவர் பிரேம்ஜி.

அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய கோவா முதல் மாநாடு வரை அனைத்துப் படங்களிலும் தவறாமல் தலைகாட்டியதோடு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார் பிரேம்ஜி.

இவரது தந்தை கங்கை அமரன் திரைத்துறையில் பன்முகத்தன்மையுடன் வலம்வந்த சமயத்தில் இவரை முதல் முதலாக கேமிரா முன் கொண்டு வந்து நிறுத்திய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

தனது மனைவி மற்றும் சிறுவர்களாக இருந்த அவரது மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்க்காக எடுக்கப்பட்ட வீடியோ தான் அது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யும் அதில் இடம்பெற்றிருக்கிறார் பிரேம்ஜியை பார்த்து “கூச்சப்படாதே… வணக்கம் சொல்லு” என்று கேமிரா முன் நிற்கவும் கற்றுக்கொடுக்கிறார் எஸ்.பி.பி.

மாநாடு படத்தில் “ஓவர் ஆக்ட் பண்ணாத” என்று பிரேம்ஜி குறித்து அண்ணன் வெங்கட் பிரபு எழுதிய வசனத்தை சிம்பு பேசியிருப்பார், இதை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் அந்த பிரேம்ஜியா இது என்று ஆச்சர்யமாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரும் 1987 ம் ஆண்டு வெளிவந்த ‘இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் கங்கை அமரன் எழுதி இசையமைத்த ‘படிக்காம பாரதத்த படபடன்னு எழுதினேயே… எனக்கந்த ஞானத்ததா’ என்று விநாயகரைப் பார்த்து பாடும் வரிகள் இடம்பெற்ற ‘பள்ளிக்கூடம் போகாம’ என்ற பாடலின் மூலம்  பின்னணிப் பாடகர்களாக  திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article