கத்ரினாவின் கணவர் விக்கி கௌஷல் திருமணம் முடிந்த 10 நாளில் ஷூட்டிங்கிற்கு கிளம்பி சம்பவம் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டிசம்பர் 9 ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கோலாகலமாக நடந்தது கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் திருமணம்.

திருமண நிகழ்வுகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருவரும் மாறி மாறி பதிவிட்டு வந்தனர்.

கத்ரினா-வுக்கு திருமண பரிசாக மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ரேன்ஞ் ரோவர் காரை பரிசளித்தார் நடிகர் சல்மான்கான்.

https://www.instagram.com/p/CXnB_GdoAUh/

இந்நிலையில், இன்று தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விக்கி கௌஷல் தான் ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள், கத்ரினா வரவில்லையா ? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.

திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக விக்கி கௌஷலுக்கு கத்ரினா கைஃப் நேற்று தன் கையால் செய்த அல்வா கொடுத்ததாக தனது இன்ஸ்டாகிராமில் கத்ரினா பதிவிட்டுள்ளதோடு, அது நன்றாக இருந்ததாக விக்கி கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.