சென்னை

மிழகத்தில் ஜிகா வைரசை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

கேரளாவில் கொசுக்களால் பரவி வரும் ஜிகா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.   திருவனந்தபுரம் நகரில் வசிக்கும் ஒரு கர்ப்பிணிப்  பெண்ணிடம் இந்த வைரஸ் தொற்று காணப்பட்டுள்ளது.  இதையடுத்து கேரளாவில் அறிகுறிகள் உள்ள அனைவரையும் சோதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை திருவனந்தபுரம் பகுதிகளில் மட்டும் 10 பேருக்கு மேல் தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   இவர்களில் சிலர் தமிழக எல்லையோர பகுதிகளில் இருந்து வந்துள்ளவர்கள் என்பதால் தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என அஞ்சப்பட்டது.  இன்று தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது மா சுப்ரமணியன், “தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஜிகா வைரசைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ஜிகா வைரஸ் தாக்குதல் பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இல்லாதவர்களையே பாதிக்கிறது.என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   நேற்று இரவு 5 லட்சம் தடுப்பூசிகள் சென்னை கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் இனி தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு வராது ” எனத் தெரிவித்துள்ளார்.