சென்னை

திமுக சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கப் பல மராத்தான் போட்டிகள் நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

 

கொரோனா தாக்குதலுக்குப் பிறகு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி முக்கியம் என்னும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.   இதை மேலும் அதிகரிக்க ”ஓடலாம், நோயின்றி வாழலாம்” என்னும் தலைப்பில் லண்டனில் விர்சுவல் சேலஞ்ச் மராத்தான் போட்டி நடந்தது.

அதில் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் கலந்து கொண்டார்.   அவர் இன்று அதிகாலை 4.45 மணிக்குக் கிண்டியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கிளம்பி 21 கிமீ தூரம் ஓடி மெரினா கடற்கரையில் போட்டியை நிறைவு செய்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம், “இது  21 கிலோமீட்டர் மராத்தானில் தாம் ஓடும் 129 ஆவது மராத்தான் ஆகும்.   இனி வரும் காலங்களில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும். அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான மாரத்தான் போட்டிகள் மறுக்கப்பட்டதால் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திமுக சார்பில் பல மராத்தான் போட்டிகள் நடத்தப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.