லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’தர்பார்’ படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முன்னாள் பாலிவுட் நடிகர்கள் ஸ்மிதா பாடில் மற்றும் ராஜ் பப்பாரின் மகன் ப்ரதீக் பப்பார். ’ஜானே தூ யா ஜானே நா’ படம் மூலம் அறிமுகமான ப்ரதீக், ’தோபி காட்’, ’தம் மாரோ தம்’, ’பாகி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பாலிவுட் ரீமேக்கான ’ஏக் தீவானா தா’ படத்தில் இவர் தான் நாயகன்.

‘தர்பார்’ 2020 பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.