‘பிச்சைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் – சித்தார்த் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ . இப்படத்தை சசி இயக்கியுள்ளார் . இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராக நடித்துள்ளார்.

மேலும், காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யூ-டியூப் குழுவின் நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய ,புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.