ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.

வெளியான 12 மணி நேரத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது வீடியோ!