லையாளத்திலிருந்து தமிழுக்கு கலாபவன் மணி, ராஜன் பிதேவ், திலகன், மனோஜ் கே ஜெயன், பாபு ஆண்டனி போன்ற பல நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடித்திருக் கின்றனர், அந்த வரிசையில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்திருப்ப வர் அனில் முரளி. தனுஷ் நடித்த கொடி, சிவ கார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் மற்றும் நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா போன்ற பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான மலையாளம் தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் .

அனில் முரளி உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பு பிரச்னை காரணமாக இவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனில்லா மல் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.
வில்லன். குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார். அனிலுக்கு மனைவி மற்றும் மகன் ஆதித்யா, மகள் அருந்ததி ஆகியோர் உள்ளனர்.
Popular Villain  Actor Anil Murali passed away Today,