டிடி என்று செல்லமாக அழைக்கப்படுபவர், பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர, நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்குபவர். திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இவர் தனது  சிறு வயது  நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து, கடந்த 2014ம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  டிடி, சினிமாவில் நடிப்பதை அவர் கணவர் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

இதனால் டிடி சில காலம் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

சமீபகாலமாக மீண்டும் அன்புடன் டிடி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தோன்ற ஆரம்பித்தருக்கிறார். மேலும், மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் பாடகியும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தனது டுவிட்டரில் டிடி தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். பிரபலங்களுடன் டிடி இருப்பது போன்ற அந்த படங்கள், டிடிக்கும் அவரது கணவருக்கும் பெரும் கருத்து வேற்றுமையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

ந்த நிலையில் திவ்யதர்ஷினியும், அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது சின்னத்திரை மற்றும் பெரிய திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.