பிரபல பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 47 வயதான பவதாரிணி கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் இலங்கை சென்ற இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை மரணமடைந்தார்.

இவரது இந்த திடீர் மறைவுச் செய்தியை அறிந்து திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை என்ற நிலையில் இவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.

சென்னை தி.நகர் முருகேசன் தெருவில் உள்ள இசைஞானி இளையராஜாவின் வீட்டில் இன்று மாலை 6 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள பவதாரிணியின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி காலமானார்…