பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டது.

32 வயதான பூனம் பாண்டேவின் இந்த மறைவு செய்தி குறித்து அவரது மேலாளர் உறுதி செய்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தனது இருப்பைக் காட்டிக்கொள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த பூனம் பாண்டேவின் மறைவு குறித்து உறுதிப்படுத்த அவரது மேலாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர்.

இதில் பூனம் பாண்டேவின் மறைவு குறித்து அவரது சகோதரி உறுதிப்படுத்தியதை அடுத்தே அவரது மரணத்தை தான் உறுதிப்படுத்தியதாக அவரது மேலாளர் கூறினார்.

இருப்பினும் மும்பையில் இருந்து வெளியூர் சென்ற பூனம் பாண்டே எங்கு இருந்தார் என்ன ஆனது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

இதனையடுத்து அவரது அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் மற்றும் அவரது சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களை மொபைல் உள்ளிட்ட வேறு வழியாக தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

இவர்களது மொபைல் உள்ளிட்டவை சுவிட்ச் ஆப் அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதால் பூனம் பாண்டேவின் மரணம் குறித்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

சர்ச்சைக்கு பெயர்போன பூனம் பாண்டேவின் மரணம் தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் அவரது மரணம் குறித்த சர்ச்சை தொடர்கிறது.

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உடல்நடலக்குறைவால் மரணம்…