சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி தனது இருப்பைக் காட்டி வந்தவர் பூனம் பாண்டே.

பிரபல பாலிவுட் நடிகையும் மாடலுமான 32 வயதான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததாக நேற்று தகவல் வெளியானது.

தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதாகக் காட்டிக்கொள்ளாமல் சுறுசுறுப்பாக இயங்கி வந்த பூனம் பாண்டேவின் இந்த திடீர் மறைவுச் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தகவலை அவரது மேலாளர் உறுதி செய்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார் எப்போது இறந்தார் என்ற எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடித்தது.

இந்த நிலையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூனம் பாண்டே இந்த பதிவின் மூலம் தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

பூனம் பாண்டேவின் இந்த பதிவை அடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

பூனம் பாண்டே மரணம் குறித்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள்… தொடரும் சர்ச்சை…