சிம்பு-வின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது இதை முன்னிட்டு STR48 படத்தின் போஸ்டரை வெளியிட்டு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த மாதம் இதற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்காக பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமலஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

வரலாற்று சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்தப் படம் சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.