நடிகர் விஜய் துங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்க உள்ள விஜய் அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளார்.

முதல் கட்டமாக தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள நடிகர் விஜய் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சி அமைப்பது ஒன்றே இலக்கு என்றும் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.