சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.   அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்கள்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா  ஆயிரம் ரொக்கம் , ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதற்காக ரூபாய் 2357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை நேரடியாக வழங்குவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்த நிலையில், இன்றுமுதல்  பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. இன்று முதல் 8ம் தேதி வரை நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில், அமைச்சர் சக்கரபாணி ஆய்வு பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்மதினார். பின்னர்   செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சக்கரபாணி, .பொங்கலுக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது  பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருக்கும் எற்றார்.

இதுவரை 60சதவிகித பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், இன்னும் 2 நாளில் அனைத்தும், சென்று விடும் என்றார்.

மேலும், கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதுஎன்றவர், 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை  பொங்கல் பரிசு ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள், 13ந்தேதி அன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதையடுத்து பேசிய, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்குவதில் எந்த சிக்கலும் வராது எ என்றவர், அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நேரடியாக வழங்கப்படும். ரேசன் அட்டைதாரர்களின்  பயோமெட்ரிக் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் ரூ.1,000  வழங்கப்பட இருப்பதால், எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை என்றார்.