சென்னை
வரும் 25 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழல்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி மற்றும் அதே எண்ணிக்கையில் இலவச சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்ட்டு இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 9 ஆ,ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அன்று ஒருநாள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏற்கனவே இன்றோடு. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெறும் என கூறப்பட்டிருந்தது.
தற்போது, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் இதனை பயன்படுத்தி, விடுபட்ட அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயன்பெறலாம் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.