சென்னை
நாளை காலை காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயிவே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
”பொங்கலுக்க்க் சொந்த ஊர் சென்று விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படஉள்ளன.
அதாவது வரும் 20 ஆம் தேதி (நாளை) தாம்பரம் – காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.
வரும் 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 மணி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரெயில்களை பயன்படுத்தலாம்”
என அறிவிக்கப்பட்டுள்ளது .