மதுரை டாஸ்மாக் பாரில் தகராறு செய்து பணம் பறித்த கும்பல் ஊழியர் மீது, கொதிக்கும் எண்ணை ஊற்றிவிட்டு தப்பிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை செல்லூரில் உள்ள பூந்தமல்லி நகரைச் சேர்ந்தவர் கனிராஜ். இவர், கைலாசபுரம் தத்தனேரி மெயின் ரோட் டில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருகிறார். பிற்பகலில், சிவகாமி நகரைச் சேர்ந்த ஜெயசூர்யா, அசோக்நகரைச் சேர்ந்த மீன் முள் முத்துப்பாண்டி உள்பட 3 பேர் மது குடிக்க வந்தனர். அதிகளவில் மது குடித்த அவர்கள், போதை தலைக்கேறிய நிலையில் டாஸ்மாக் ஊழியர் கனிராஜிடம் தகராறு செய்தனர். அப்போது 3 பேரும் கத்தியை காட்டி கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2,500-ஐ எடுத்துக் கொண் டனர்.

அப்போது அதே பாரில் பணிபுரியும் சின்னதம்பி என்பவர் 3 பேரையும் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பாரில் சிக்கன் பொறிப்பதற்காக கொதித்துக் கொண்டிருந்த எண்ணை எடுத்து சின்ன தம்பி மீது ஊற்றி விட்டு தப்பினர். இதில் வலியால் அலறி துடித்த அவரை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர் பாக கனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.