டெல்லி: அருணாசல பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில்,  பிரதமரின் மவுனம் அக்கறையின்மையை காட்டுகிறது என்றும், கடத்தப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதி உள்பட அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, அசாம் எல்லைப்பகுதி களிலும் அவ்வப்போது சீனா தொல்லை கொடுத்து வருகிறது. எல்லை பகுதிகளில் ராணுவ துருப்புகளை நிறுத்தியும், புதிய கிராமங்களை உருவாக்கியும், பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தைச் சேர்ந்த மிரம் தரோன் என்ற 17வயது சிறுவன் சீன ராணுவத்தி னரால் கடந்திச்செல்லப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக,  அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி காங்கிரஸ் எம்எல்ஏ, மற்றம் எம்.பி.க்கள்  மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் மவுனம் அவரது அக்கறையின்மையை காட்டுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் இளைஞன்  சீனாவால் கடத்தப்பட்டார் – இதுபோன்ற இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். நாங்கள் மீராம் தரூனின் குடும்பத்துடன் இருக்கிறோம், நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.

பிரதமரின் முட்டாள்தனமான மௌனம்; அவரது அறிக்கை – அவர் கவலைப்படவில்லை என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அருணாசல பிரதேசத்தில் சிறுவனை கடத்தி சென்றது சீன ராணுவம்! காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங்…