நம்பிக்கையின் மற்றொரு பெயர் ராகுல்… ஜனநாயகத்தை மீட்டெடுக்க உள்ள ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி…

Must read

பா.ஜ.க. வின் எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இருக்கும் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி என்று அவரைப் பற்றிய கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் பஞ்சாபில் மோடி கலந்து கொள்வதாக இருந்த பொதுக்கூட்டத்திற்கு ஆட்கள் வராத நிலையில் பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது.

உ.பி. மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி என்பது போன்ற ஒரு பிம்பத்தை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது.

இணைய வழி பிரச்சாரம், 300 பேருக்கு மேல் கூட்டம் கூட தடை போன்ற அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இணைய வழி பிரச்சாரத்தை மூன்று, நான்கு அடுக்குகளாக குழு அமைத்து நடத்திவருகிறது பா.ஜ.க.

பா.ஜ.க. வை போல் பணபலம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பெரிதும் நம்பி இல்லாமல், மக்களோடு மக்களாக வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ்.

சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் நம்பிக்கை நட்சத்திரமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார், பா.ஜ.க. வின் எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி தான் என்று ராகுல் காந்தி குறித்து இணையத்தில் பதிவேற்றப்பட்ட கவிதை தற்போது வைரலாகி வருகிறது.

More articles

Latest article