டில்லி

கொரோனா நோயாளிகள் பெருகி வருவதால் அவர்களின் சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்க பிரதமர் பல முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.  இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே கொரோனா சிகிச்சைக்கு போதுமான மருத்துவர்கள் பிரதமர் மோடி சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

அவை பின் வருமாறு :

  • மருத்துவப் பட்டம் பெற்றோர் மேற்படிப்பு பட்டப்படிப்பு சேர்க்கைக்கு நடக்க இருந்த நீட் தேர்வு குறைந்த பட்சம் நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
  • இனி வரும் அரசு வேலை வாய்ப்புக்களில் கொரோனா சிகிச்சை பணியில் 100 நாட்கள் வரை பணி புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கொரோனா மேலாண்மை பணிகளைச் செய்வோருக்கு துறை தொடர்பான சலுகைகள் அளிக்கப்படும்.
  • எம் பி பி எஸ் இறுதி ஆண்டு மாணவர்கள் சிறிதளவு கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனையும் துறைத் தலைவர் மேற்பார்வையில் சிகிச்சையும் அளிக்கப் பயன்படுத்தப்படுவார்கள்.
  • பிஎஸ்சி மற்றும் பொது செவிலியர் பயிற்சி  பெற்றோர் முழு நேர கொரோனா பணிக்கு மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் மேற்பார்வையில் பணிக்கு அமர்த்தப்படுவர்.
  • கொரோனா சிகிச்சைப் பணியில் 100 நாட்களைக் கடந்த மருத்துவர்களுக்கு பிரதமரின் சிறப்பு கொரோனா தேசிய சேவை விருதுகள் வழங்கப்படும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.