பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவர்களின் இல்ல திருமண விழா சேலத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்றார்.
தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனுடன் இனைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ள ஜேசன் சஞ்சய் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னதாக இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், ஓ.பி.எஸ்., நடிகர் விஜய் சேதுபதி, ஜேசன் சஞ்சய் ஆகியோர் ஒரே விமானத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது.