சென்னை,
பா.ம.கவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
“2016 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017 ஆம் ஆண்டை வரவேற்போம்“ என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு, “2016ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017 ஆம் ஆண்டை வரவேற்போம்“ என்ற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் வரும் 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இப்பொதுக்குழு நடைபெறவிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.