பாமக மாவட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை! காரைக்கால் திருநள்ளாறில் பதற்றம் – பரபரப்பு

Must read

புதுச்சேரி: புதுச்சேரியை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் பகுதியில் பாமக மாவட்ட  செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்து வருபவர் தேவமணி. இவர் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில்  பணியை முடித்து  தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து,  சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த தேவமணி தேவமணி காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக திருநள்ளாறு காரைக்கால் பகுதிகளில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவமணியை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

More articles

Latest article