கடத்தப்பட்டுள்ள எம்எல்ஏக்களை ஆஜர்படுத்து!: பாமக வழக்கு!

Must read

சென்னை,

டந்த சில நாட்களாக  அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினால் கடத்தி ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைக்கப் பட்டு உள்ளனர். அவர்களை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் பாமக பாலு.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை காரணமாக முதல் ஓபிஎஸ்க்கும், சசிகலா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சிசகலா தரப்பினரால் ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தையே பரபரப்பாகி உள்ள இந்த நிகழ்வு குறித்து அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான பாலு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  கடத்தி வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏகளை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article