டில்லி:

வர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இருக்காது என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்து உள்ளார்.

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.  அப்போது 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர இருப்பதால், 2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு மோடி, “இது பற்றிய பிரச்சினைகள் நிதி மந்திரியின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை ஆகும் என்பதால், அதில் நான் தலையிட விரும்பவில்லை  இதற்கு. முன்பு குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த போதும், தற்போது பிரதமராக இருப்பதாலும் நான் சில விஷயங்களை அறிந்து இருக்கிறேன்.

எப்போதுமே சாமானிய மக்கள் நேர்மையான, திறமையான அரசாங்கத்தைத்தான் விரும்புகிறார்களே அன்றி. இலவசங்களையும், சலுகைகளையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதாக கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை. சாமானிய மக்களின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்ற இந்த அரசாங்கம் உறுதிபூண்டு இருக்கிறது.” எனக் கூறினார்.

மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்பதை இவ்வாறு அவர் சூசகமாக தெரிவித்து உள்ளார்.