புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இவ்வாண்டில் முதல்முறையாக இன்று முதல் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த ஐரோப்பிய பயணத்தின்போது, 25 நிகழ்வுகளில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் ஏழு நாடுகளைச் சேர்ந்த எட்டு உலகத் தலைவர்களுடனும் மேலும் 50 உலகளாவிய வணிகத் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

கொரோனா பரவல்கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்து வந்தார். தொற்று பரவல் சற்று குறைந்ததும், கடந்தாண்டு மார்ச்சில், நம் அண்டை நாடான வங்கதேசத்துக்கு சென்றார். இதன் பின், கடந்த செப்டம்பரில் ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றார். அக்டோபரில் பிரிட்டன், இத்தாலி நாடுகளுக்கு சென்றார்.அதற்கு பின், தற்போது தான் மீண்டும் வெளிநாடு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.