டெல்லி:
பிரதமர் மோடி, நாளை (ஆகஸ்டு 1ந்தேதி) மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை 3வது கட்டமாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இருந்தாலும், தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, லாக்டவுனை ஆகஸ்டு 30ந்தேதி வரை நீட்டித்துள்ளன.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்விநிலையங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், புதிய கல்விக்கொள்கையை மத்தியஅரசு அமல்படுத்துவதாக அறிவித்து உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே  உரையாற்றுகிறார்.
அவரது உரையில், கொரோனா நிலவரம், கொரோனா தளர்வு, சீனா விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு, புதிய கல்வி கொள்கை குறித்து அவர் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது.