தமிழகத்தில் இன்று 5,881 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்வு

Must read

சென்னை:
மிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர்  மொத்த கொரோனா பாதிப்பு 2,45, 859 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5,778 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,956 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 97 பேர் உயிரிழந்தனர். 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 68 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 60,276 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,58,138 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,492 பேர் ஆண்கள், 2,389 பேர் பெண்கள்.
தமிழகத்தில் 120 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,968

இன்று ஒரே நாளில்  60,276  பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை  26,58,138 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

More articles

Latest article