டில்லி

கொரோனா வைரஸ் பரவுவதன்  காரணமாகப் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதை ரத்து செய்துள்ளார்.

சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் கடுமையாக பரவி உள்ளது.   தற்போது சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுக்கடங்காத நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரௌ தெரிவித்துள்ளது   சீன அரசின் வேண்டுகோளுக்கு இணங்க உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலை அறிவித்தது.

அதன்படி உலக மக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   பல மேல் நாடுகளில் கை குலுக்குவது மற்றும் அந்நாட்டு வழக்கப்படி கட்டித் தழுவுதல், கன்னத்தில் முத்தமிடல் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் மக்கள் யாரும் எவ்வித கூட்டங்களிலும் கலந்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது/

இன்னும் சில தினங்களில் வட இந்தியாவின் முக்கிய பண்டிகையான ஹோலிப் பண்டிகை வர உள்ளது.    வட இந்தியப் பகுதிகளில் மக்கள் பலரும் ஒன்று கூடி ஹோலி விழா கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.  இதில் பிரதமர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்வார்கள். இந்த வருடம் கூட்டங்களில் கலந்துக் கொள்ளக் கூடாது என அறிவுர்றுத்தபப்ட்டுள்ளதால் பிரதமர் மோடி ஹோலி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதை ரத்து செய்துள்ளார்.