இலங்கை பிரதமர் ராஜ பக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Must read

கொழும்பு:

லங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக ராஜ பக்சே பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

இலங்கை பார்லி.யில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் ஒட்டளிப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப் பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இலங்கை முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் ஓட்டு போட்டார். பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின. .ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போதைய பிரதமர் ராஜ பக்சே மீண்டும் பிரதமராக உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தின தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகமும் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

More articles

Latest article