டில்லி

லிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் மோடி மற்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி  ஒலிம்பிக் காலிறுதி வெண்கலப் பதக்கத்துக்கான  போட்டியில் இன்று காலை ஜெர்மனியுடன் மோதியது.  இதில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின கட்சி 6 வினாடிகளில் ஜெர்மனிக்கு பெனால்டி கிடைத்ததால் கடும் பரப்பரப்பு ஏற்பட்டது.  இருப்பினும் இந்தியா வெற்றி பெற்றது.

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுள்ளது மக்களிடையே பெரிதும் மகிழ்வை அளித்துள்ளது.  இந்திய அணிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “”சரித்திர சாதனை.  இந்நாள் ஒவ்வொரு இந்தியர் நினைவிலும் நிறைந்திருக்கும் நாளாகும்.

நமது ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்தை நமது நாட்டுக்கு எடுத்து வருவதற்கு வாழ்த்துக்கள்.  இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைவரின் குறிப்பாக இளைஞர்களின் எண்ணத்தில் அவர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இந்தியா ஹாக்கி அணியால் பெருமை அடைகிறது” எனப் பதிந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டிவிட்டரில், “இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பாராட்டுக்கள்,   இது மிகப்பெரிய நிகழ்வாகும்.  நாடு முழுவதும் உங்கள் சாதனையால் பெருமை அடைகிறது.  இது அவசியம் கிடைக்க வேண்டிய வெற்றி” எனப்  பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.