குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணத்துக்கு பிரதமர் இரங்கல்

Must read

காந்தி நகர்

காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி நேற்று மரணம் அடைந்துள்ளார்.

குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான மாதவ் சிங் சோலங்கி நீண்ட காலம் குஜராத் முதல்வர்ஃபாக் பதவி வகித்தவர் ஆவார்.  தற்போது சுமார் 93 வயதாகும் மாதவ் சிங் சோலங்கி மோடி குஜராத் முதல் ஆகும் முன்பு குஜராத் மாநிலத்தில் முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.

இவர் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.  அத்துடன் கடந்த 1991-92 ஆம் வருடம் மத்திய வெளியுறாவுத் துரை அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.  இவர் வயது மூப்பு காரணமாக மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று காலை மாதவ் சிங் சோலங்கி காந்தி நகரில் உள்ள தமது வீட்டில் மரணம் அடைந்துள்ளார்.  அவருடைய மரணம் காங்கிரஸ் கட்சியினரை மட்டுமின்றி பலரையும் துயரில் ஆழ்த்தி உள்ளது.  இவரது மரணத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article