கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் மொபைல்கள் திருடப்பட்டுள்ளன.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அசாம் மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அவர் நகரசபை தேர்தலில் தனது கட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்காக குவாஹாட்டியில் உள்ள காமாக்யா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பிறகு விமானத்தில் அவருடன் வந்த அவரது பாதுகாப்பு வீரர்களில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  மீதமுள்ள 12 வீரர்கள், கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொல்கத்தா வந்து கொண்டிருந்தனர். இந்த ரயில் மேற்கு வங்கத்தின் கூச் பிஹார் ரயில் நிலையம் வந்தபோது 2 வீரர்களின் கைப்பைகளைக் காணவில்லை. அந்தப்பையில் வீரர்கள் தங்களின் கைத்துப்பாக்கி மற்றும் கைப்பேசியை வைத்திருந்தனர். இருவரும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தனர்.

அந்தப் பைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டது பின்னர் தெரிய வந்தது.  வீரர்கள் கூச் பிஹார் ரயில் நிலைய காவல் நிலையத்தில் வீரர்கள் புகார் செய்தனர். இது குறித்து மம்தா அரசின் காவல் துறை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.