சென்னை

சென்னையில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு விமானியின் சாதுரியத்தால் 180 பேர் உயிர் தப்பி உள்ளனர்.

நேற்று சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு ஒரு சென்றுள்ளது.  அந்த விமானம் ஓடுபாதைக்குச் சென்றபோது அதில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 180 பேர் இருந்தனர். விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைக் கண்டுபிடித்த விமானி, அது குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

நிலையத்துக்குத் திரும்பி வந்த விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். விமானம் இயந்திரக் கோளாற்றைச் சரிசெய்ய முடியாததால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  பயணிகள் உள்ளிட்ட 180 பேர் விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பி உள்ளனர்.