சென்னை:
அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ள தமிழர்களை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தளபதி புர்ஹான் வானி மத்திய பாதுகாப்பு படை போலீசாரால் கொல்லப்பட்டதால் அங்கு கலவரம் நடந்து வருகிறது. இன்று 4வது நாளாக கலவரம் நீடிக்கிறது.
இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை குழுவினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. அமர்நாத் யாத்திரை 3வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்றுள்ள ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் ராணுவத்தினரின் பால்டால் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ராணுவ முகாமில் அதிகபடியாக யாத்ரிகர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர், உணவு., மருந்துகளுக்குப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முதியோர், பெண்கள் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், ஆழ்ந்த துக்கத்திலிருந்து தமிழக அரசு உடனே  விழித்துக் கொண்டு உடனடி நடடிவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.