சென்னை:
ந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:  தமிழ்நாட்டில கஞ்சா சாக்லெட் பெருமளவு கைப்பற்றப்பட்டு உள்ளது. இது  பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சை விதைப்பது போன்றது. வருங்கால இளைய சமுதாயமே இதனால் பாதிக்கப்படும்  சூழ்நிலை உருவாகும். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.  இந்த சாக்லெட் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் வழக்கு தொடர வேண்டும்

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் சாலை போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து  வசதிகளை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி அமெரிக்கா சென்றுள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசு, இலங்கை வடக்கு மாகாண  அரசு மற்றும் இருநாட்டு மீனவர் சங்கங்களை அழைத்து அனைவரும் ஒன்று கூடி பேச்சு  நடத்தினால் மட்டுமே தீர்வு ஏற்படும். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்பது ஒன்றே வழி என்பது சரியானதல்ல. 1974-ம் ஆண்டே கச்சத்தீவு அப்போதைய மத்திய மாநில அரசுகளால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டு விட்டது.  தற்போது அதுபற்றி பேசுவது சரியல்ல.
பூரண மதுவிலக்கு தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்பது பிஜேபியின் கொள்யாகும். ஆனால் மாநில அரசுதான் அதை அமுல்படுத்த முன் வர வேண்டும். குளிர் பிரதேச பகுதிகளில் மதுவிலக்கை அமுல்படுத்த இயலாது, தமிழ்நாடு போன்ற வெப்பமான பகுதிகளில்தான் மது விலக்கை அமுல்படுத்த முடியும். மேலும் இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியாது. அதற்கான சாத்தியமும் இல்லை என்றார்.