டெல்லியில் தர்ணா: தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

Must read

மன்னார்குடி:
டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாய சங்கங்களின் மாநில தலைவர் கூறினார்.
மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு காவிரி டெல்டா நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
PRPandian

  • விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறப்பது தொடர்கிறது.
  • தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்திட வேண்டும்.
  • வருகிற 16-ந்தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற இருக்கும் அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கவுன்சில் கூட்டம் விவசாயிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.
  • கூட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கியில் பெற்றுள்ள கடன் முழுமையும் தள்ளுபடி செய்திடவும்,
  • நதிகளை தேசியமயமாக்கி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ளவும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்திடவும்,
  • அனைத்து முதல்வர்களும், பிரதமரை வலியுறுத்திட வேண்டும்.

மேற்கண்ட    கோரிக்கையை   வலியுறுத்தி  முதல்வர்கள்    மாநாடு   நடைபெறும்  அரங்கத்தின் முன்  வருகிற 16-ந்தேதி அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்த முடிவெடுத்து உள்ளோம். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போராட்டம் நடைபெறும்.
இப்போராட்ட விவரத்தினை தமிழ்நாடு உள்பட அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம்‘மூலமாக தெரிவிக்க உள்ளோம். ‘போராட்டத்தில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில விவசாய சங்கங்களின் தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்க அழைக்கிறோம்.
மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசின் சார்பில் தீர்மானமாக முன்மொழிய வேண்டும் என்றும் கோருகிறோம்.

More articles

Latest article