சென்னை:
தன் விசாரணையில் தவறு ஏதேனும் நடந்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்று ஐகோர்ட்டு தமிழக காவல்துறையை எச்சரித்து உள்ளது.
மதன் - பாரிவேந்தருடன்
வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர்  மதன் திடீரென் காணாமல் போனார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார். கடிதத்தில் வாரணாசிக்கு சென்று ஜலசமாதி அடையபோவதாக குறிப்பிட்டு இருந்தார்.  இதையடுத்து மதனின்  அம்மா  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்திருந்தார்.  போலீசார் தனிப்படை அமைத்து மதனை  தேடி  வருகின்றனர்.
மதனின்  அம்மா ஆர்.எஸ்.தங்கம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, இன்று நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்விடம்  விசாரணைக்கு வந்தது.
மதனின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்: எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து, பாகவன்  பச்சமுத்து  மற்றும்  சண்முகம் ஆகியோரிடம் விசாரணை நடைபெறவில்லை என்றும், பாரிவேந்தருக்குத்தான் மதனைப்பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும் என்றும் தங்கள் குடும்ப விழாக்களில் பாரிவேந்தர் பங்கேற்றது பற்றிய புகைப்படங்களையும்  தங்கம் வெளியிட்டுள்ளார். ஆகவே அவர்களை விசாரித்தால் உண்மை தெரியவரும் என்றும் நீதிபதிகளிடம் கோரினார்.
srm-highcr
மதன் காணாமல் போனது பற்றி ஐகோர்ட்டு நீதிபதிகள்,  எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தரிடம் விசாரணை நடத்த போலீஸ் தயங்குவது ஏன் கேள்வி எழுப்பினர். மதன் – பாரிவேந்தர் தொடர்பு  சந்தேகத்திற்கு  இடமின்றி தெளிவான பிறகும் விசாரணை சரியாக நடைபெறவில்லை எனவும் நீதிமன்றம் காவல்துறையை எச்சரித்துள்ளது.
 
காவல்துறை சார்பில் மதன் வழக்கு விசாரணை தொடர்பான விவரங்கள், சீல் வைக்கப்பட்ட உரையில்  நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கபட்டது. அதை ஏற்றுகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையில் ஏதேனும் தவறு  நடைபெற்றால்,  வழக்கை சிபிஐக்கு மாற்றவும் தயங்க மாட்டோம் என்றும் அடுத்த கட்ட விசாரணையை வரும்  28ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.