மெர்சல் திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சில காட்சிகள், மத்திய பாஜக அரசின்  ஜி.எஸ்.டி  மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை விமர்சிப்பதாக இருக்கிறது என்று பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  அக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் மற்றும் மெர்சல் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு  பெருகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மெர்சல் திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெறக் கோரி, சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், ‘சிங்கப்பூரில் வரி குறைவு, இந்தியாவில் வரி அதிகம் என்று மெர்சல் படத்தில் கூறப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. ஆகவே படத்தின் தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.