படங்கள்: அருணாச்சலில் தலாய் லாமா. சீன எதிர்ப்பை மீறி அனுமதித்த இந்தியா

Must read

திபெத்தை சேர்ந்த புத்தமத தலைவர் தலாய் லாமா  இந்தியா வருகை தந்துள்ளார். அவரது இந்திய வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத்தை சீனா கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டின் புத்த மதத்தலைவர் தலாய்லாமா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலமானார். இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலாய்லாமாவை அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல இந்தியா அனுமதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எங்களுக்கு கவலையளிக்கிறது. சர்ச்சைக்குரிய பகுதியில் தலாய் லாமா செல்ல அனுமதியளித்ததற்கு இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது இரு நாடுகள் இடையேயான உறவை பாதிக்கும் ” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், மத்திய அமைச்சர் ரிஜிஜு , தலாய்லாமா வருகையால் எந்த தீங்கும் ஏற்படாது எனத் தெரிவித்தார்.

சீன எதிர்ப்பை உதாசீனப்படுத்தி, ஏழு ஆண்டுகளில் இரண்டாம் தடவையாய் நாடுகடத்தப்பட்ட திபெத்திய தலைவர் தலாய் லாமா, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்-ல் நுழைந்துள்ளார். ஏப்ரல் 7ம் தேதி முதலே சீனாவில் தலாய் லாமாவை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது எனக் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், ஆன்மீகப் பயணமாய் வருபவர்களை இந்தியா தடுக்காது என இந்தியத் தரப்பில் விளக்கமளிக்கப் பட்டது.

அவர் 1959ல் லாசாவை விட்டு வெளியேறித் தவாங் துறை வழியாகக் கால்வழிப் பயணமாய் இந்தியாவிற்கு கடந்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1983 ல் தொடங்கி இவருக்கு இது ஏழாவது பயணம் . அதில் ஐந்தாவது முறையாகத் தவாங் பயணித்துள்ளார். இந்த விஜயம்  திபெத் இருந்து அவரை நாடு கடத்தப்பட்ட  50 ஆண்டுகளுக்குப் பின்னர் ந்டைபெறுவது குறிப்பிடத் தக்கது.
சீனாவின் அரசு ஊடகங்கள் சீனாவின் தெற்கு எல்லையைச் சவால் விடத் தலாய் லாமா-வை ஒரு ராஜதந்திர உபாயமாகப் இந்தியா பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளன.
தலாய் லாமா ஏப்ரல் 4 அன்று எலிகாப்டர் மூலம் தவாங் வந்தடைவதாய் இருந்து. ஆனால் மோசமான வானிலை காரணமாக, அவர் குவஹாத்தியிலிருந்து சாலையில் 550 கி.மீ. பயணம் செய்து தவாங் வந்தடைய வேண்டியிருந்தது.
அவருடன் அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா கண்டு ( Pema Khandu) உடன் பயணித்தார். தலாய் லாமா, வயது 81, தலாயின் முந்தைய அருணாச்சல பிரதேச பயணம், 2009 ல் நிகழ்ந்தது. அப்போது தவாங்கில் நான்கு நாட்கள் தவாங்கில் தங்கினார்

தலாய்லாமா தன் பயணத்தின் முதல் கட்டமாய் மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைநகரமான போம்டிலா ( Bomdila) வில் தங்கினார். இங்குதான் 1962 போரில் சீன வீரர்கள் போர் வெற்றிக்குப் பின் வெற்றியைக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத் தக்கது. போம்டிலாவில் சொற்பொழிவு ஆற்றிவிட்டு, அங்கிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திராங்கில் (Dirang) இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். அங்கு அவர் துப்சிங் தர்க்யே ( Thupsing Dhargye) மடத்தில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

படம் 1: அருணாச்சலப் பிரதேசத்தில், இந்தியச் சீன எல்லையில் உள்ள தவங் மாவட்ட்த்தில் உள்ள யிகா சோசின் (Yiga Choezin) னில் ஆன்மீகவுரை ஆற்ற ஆயத்தமாகிய போது.

 

 

படம் 2: புத்த மதத்தை பின்பற்றுபவர்களிடையே உரையாற்றும் போது…

 

படம் 3: தலாய் லாமாவை வரவேற்க விழாக்கோலம் பூண்ட தவாங்.

படம் 4: ஏப்ரல் 7ம் தேதி தலாய் லாமாவின் வருகைக்காக காத்திருக்கும் இளம் புத்தமத துறவிகள்.

படம் 5:  ஏப்ரல் 7ம் தேதியன்று ஜங் பல்புங் கோம்பா தவாங் (Jang Palpung Gompa Tawang Monastery) மடத்தில் வரவேற்றனர்.

பட்ம 6: யிட்-கா-சோசின் (Yid-Ga-Choezin) னில் பக்தர்கள் திரண்டு தலாய் லாமாவிற்கு  மரியாதை செலுத்தினர்.

படம் 7: இந்திய சீன எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப் பட்டிருந்ததை அடுத்து ரோந்துப்பணியில் வீரர்.

படம் 8: கும்பாபிசேகத்திற்குப் பின்னர்   தலாய் லாமா பக்தர்களிடம் கையசைக்கும் காட்சி .

 

மதத்தின் பெயரில் திபெத்தை சீனாவில் இருந்து துண்டாடுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை வெளிநாடுகளில் தலாய் லாமா மேற்கொண்டு வருகிறார் என சீனா குற்றம் சாட்டி வருகின்றது. தலாய் லாமா எந்த நாட்டுக்குச் சென்றாலும், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அவசியம் படிக்க : தலாய் லாமா என்பது அவரது இயற்பெயரா? அவரால் இந்தியாவிற்கு லாபமா ?

More articles

Latest article