சிவப்பில் படியும் கறுப்பு கறை: ஊழலால் வீழும் தென்அமெரிக்க நாடுகள்

Must read

சிவப்பில் படியும் கறுப்பு கறை: ஊழலால் வீழும் லத்தீன் அமெரிக்க நாடுகள்

லத்தீன் அமெரிக்க இடது சாரி நாடுகளாகப் பிரேசில், அர்ஜென்டீனா, வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வடார் ஆகிய ஐந்து நாடுகள் 21 ஆம் நூற்றாண்டின் ஐந்து நட்சத்திரங்களாய் விளங்கின.

(Photo credit :  FEDERICO PARRA/AFP/Getty Images)

ஆனால் வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியதும், இந்த வாரம், எக்குவடோர் தேர்தலின் போது இடது சாரி வேட்பாளர்கள் கடும் போட்டியைச் சமாளித்து அடைந்த குறுகலான வெற்றி ஆகியன சிவப்பு ராஜ்ஜியம் முடிவடையும் தருவாயில் உள்ளது என்பதை பிரதிபலிக்கின்றது. இதுகுறித்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை:

பிரேசில்
“வளர்ந்து வரும் சந்தை” எனும் பிம்பத்திலிருந்து இன்றைய பிரேசில் ஒரு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவது கண்கூடு.

இடது சாரி தலைவர் லூயிஸ் இனாசியோ-லுலா- டா- சில்வா அவர்களின் ஆட்சியின் கீழ் பிரேசில் மக்கள் 2003ல் இருந்து 2010 காலக்கட்டத்தில் கிட்ட்தட்ட 20 மில்லியன் பிரேசில் மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் ஒரு வியத்தகு முன்னேற்றம் கண்டது. மேலும், விவேகமான பொருளாதார கொள்கைகளின் பலனாய் பிரேசிலின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது. சீன உதவியுடன் வளம் நிறைந்த பிரேசில் நாட்டின் ஏற்றுமதி ஏற்றம் கண்டது.
ஆனால், அரசாங்கத்தின் புகழ் தொடர்ந்து சரிந்து வந்தது. அரசாங்கம் தன் பொருளாதார கொள்கைகளிலிருந்து மெதுவாக விலகத் துவங்கியது.

 

குறிப்பாக, லுலாவினைத் தொடர்ந்து ஆட்சி செய்த டில்மா ரௌசெப்(Dilma Rousseff), பொருளாதார மதிநுட்பத்தை கைவிட்டு தேசியவாத கொள்கைகளை செயல்படுத்த தொடங்கியதன் விளைவு மிகவும் மோசமாய் பிரதிபலித்தது. அதன் பிறகு, உலகளாவிய ஏற்றுமதித் தேவையும் மெதுவாகக் குறைந்தது. இது பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியினை மலை உச்சியிலிருந்து அதளப் பாதாளத்தில் தள்ளியது போல், ஆரோக்கியமான வளர்ச்சியை இருந்து (2010ல் 7.5 சதவீதம்) இருந்து 2015ல், ஒரு ஆழமான மந்தமான 3.8 சதவீதமாகக் குறைத்தது.
மாநில எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாஸ் மீது மையம் எரிமலையாய் சூழ்ந்துள்ள ஊழல் புகார் ஆகியன பிரேசில் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய அரசியல் ஊழல் வழக்கு எனும் அடைமொழியுடன் நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலைவர்களாய் உள்ளவர்களில், விசாரணை வளையட்திற்குள் லூலா மற்றும் ரூசெப் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இரண்டு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
குறைந்த பட்சமாய், ரூசெப்பிற்கு பதிலாக மைய-வலது சிந்தனையாளரான மைக்கேல் டெமெர் (Michel Temer) 2018ல் மீண்டும் தேர்தல் பற்றிக் கவலைப்பட இல்லை . ஏனெனில் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுக்களால், இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு அரசியல் பதவிக்குப் போட்டியிட முடியாது.

அர்ஜென்டீனா
அர்ஜென்டீனா 2001ல் கடன் $ 95 பில்லியன் நிலுவையில் இருந்ததுடன் பொருளாதாரச் சீரழிவை சந்தித்து வந்தது.  சீரழிவிலிருந்து நாட்டை மீட்கும் பொருட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து அர்ஜென்டீனா மக்கள், இடது சாரி சிந்தனையாளரான நெஸ்டர் கிர்ச்னர்-யை தேர்ந்தெடுத்தனர். அந்நேரத்தில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த மக்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வறுமையில் வாழ்ந்தார்கள். பிரேசிலின் லுலா போன்றே, கிர்ச்னருக்கும் பொருட்களின் சூப்பர் சுழற்சி யின் (commodities supercycle) போது ஆட்சிக்கு வந்தது அதிர்ஷ்டத்தை கொடுத்தது.

அவரைத் தொடர்ந்து 2007 நெஸ்டாரின் மனைவி கிரிஸ்டினா கிர்ச்னர், தேர்தலில் வெற்றியடைந்ததை தொடர்ந்து , தங்களின் 12 ஆண்டு கால ஆட்சியில், செழித்த வேளாண் ஏற்றுமதிகள் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு , ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், அரசின் கணக்கு வழக்குகளில் முறைகேடு உள்ளதாய் சந்தேகிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மயங்கி விடத் தயாரில்லாததால் பொருளாதாரம் பாதித்தது.

2015ல், அர்ஜென்டினா மக்கள் வணிகச் சார்பும், மைய-வலது மாரிசியோ மாக்ரி தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் ஏற்கனவே பொருளாதாரச் சீரமைப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இன்னும், அதன் பலன் வலர்க்சியாயாகவும், முதலீடாகவும் கனியவில்லை. மாற்று விகிதம் ஐக்கியப்படுத்துவதும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர் நம்பிக்கையை உயர்த்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்குள் கிரிஸ்டினா கிர்ச்னர் மீது $ 3 பில்லியனுக்கும் மேலான அரசாங்க பணத்தை ஏமாற்ற முயன்றார் போன்ற பல குற்றச்சாட்டுகளின் விசாரணைக்குத் தயாராகி வருகின்றார்.

வெனிசுலா
இப்போது இடது சாரி அரசு அதிகாரத்தில் உள்ள நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று.
1999 மற்றும் 2013 இடையே அந்நாட்டை ஆண்ட ஹ்யூகோ சாவேஸ் மறைந்துவிட்டார். அவரை அடுத்து ஆட்சியில் உள்ள அவரின் சீடர் ஜனாதிபதி நிக்கோலா மதுரோவிற்கு சாவேஸ்-ன் தலைமைப்பண்போ, சிந்தனைத் திறனோ இல்லை எனலாம். சாவேஸ் ஆட்சியின்போது, 2002 மற்றும் 2011 ஆண்டுகளுக்கிடையே வெனிசுலா வறுமை விகிதம் 48.6 இருந்து 29.5 சதவீத விழுந்தார். அர்ஜென்டினாவின் லுலா மற்றும் கிர்ச்னெர் போலவே, சாவேஸ் தன் ஆரம்பகால வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டின் மிக வறியவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

ஆனால் இன்றைய ஆட்சியாளரான மடுரோ அவ்வாறு இல்லை. உலகின் பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு தலைமையான வெனிசுலாவின் கச்சா எண்ணையின் விலை தற்போது வெறும் $ 42 /பீப்பாய் தான். மற்ற நாடுகலின் சராசரி விலை சுமார் $ 50/பீப்பாய். வெனிசுலாவின் ஏற்றுமதி வருவாயில் 95 சதவீதம் எண்ணை ஏற்றுமதியால் கிடைப்பதாகும். கச்சா என்ணையின் விலைவீழ்ச்சியினால், சாமானியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் கூட உணவிற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்க வேண்டிய நிலை நிலவுகின்றது.
போதுமான உணவு விற்பனைக்கு இருந்தும், வெனிசூலா மக்களில் 93 சதவீதம் இன்று அதை வாங்க முடியாது திணறுகின்றனர். பணவீக்கம் 800% உள்ளது. வெனிசுலா மத்திய வங்கி டிசம்பர் 2015ல் இருந்து பணவீக்கம் குறித்த தரவுகள் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டுவிட்டது.

 

பொலிவியா

இவோ மோரல்ஸ் (Evo Morales) ஜனவரி 2006 முதல் ஆட்சியில் உள்ளார். அவருக்கு முன் ஆட்சியிலிருந்து இரண்டு முந்தைய ஆட்சியாளர்கள் மக்களின் பிரபலமான எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் அகற்றப்பட்டபின், தேர்வானவர் இவோ. முன்னாள் கோகோ-விவசாயிகள் தொழிற்சங்க தலைவராகவும் அனுபவம் பெற்றவர். இவர் அதிரடியாய், நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை அரசுடைமை ஆக்கினார். அதன் மூலம் கிடைத்த அரசின் வருவாயை விரிவான பொது திட்டங்கள் மற்றும்வறுமையை ஒழிக்கவும் பயன்படுத்தினார். இதன்மூலம் அந்நாட்டில் வறுமை 25 சதவீதம் குறைந்தது. அவரின் உழைப்பின் ஊதியமாய், மீண்டும் 2009 மற்றும் 2014ல் ல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்தார். 2014 அவரது தலைமையின் கீழ் உள்ள, பொலிவிய பொருளாதாரம் 3ல் இருந்து 6.5 சதவீதம் இடையே ஒவ்வொரு ஆண்டும் கடந்த பத்தாண்டுகளில் விஸ்தரித்துள்ளது. ஆயினும், குறைந்து வரும் இயற்கை எரிவாயு விலைகள் அந்நாட்டின் முன்னேற்றத்தினை அச்சுறுத்துவதோடு, வறட்சியின் காரணமாக ஒரு பாரிய நீர் பற்றாக்குறை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரலெஸ் நான்காவது முறையாக ஜனாதிபதியாக விரும்புகின்றார். ஆனால், அரசியலமைப்பு வரையறைகள் இவருக்குச் சாதகமாய் இல்லை. பிப்ரவரி 2016ல் வாக்காளர்கள் 51-49 வித்தியாசத்தில் குறுகிய வெற்றியைத் தந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


அவரது முன்னாள் காதலி காப்ரியல் சபாதா ( Gabriela Zapata ) தான் பணிபுரியும் ஒரு சீன பொறியியல் நிறுவனம், $ 500 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய அரசாங்க ஒப்பந்தங்கள் பெற உதவினார் எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது, இந்தக் குற்றச்சாட்டு, மாரலெஸ் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் எனத் தெரிகின்றது.
 

 

எக்குவடோர்(Ecuador)
ரபேல் கோரியா 2007ல் ஆட்சியமைக்கும் முன்னர், பத்தாண்டுகளில் ஏழு அதிபர்களை எக்குவடோர் சந்தித்தது. பயிற்சி ரீதியாக ஒரு இடது சாரி பொருளாதார நிபுணரான ரபேல் கோரியா , டிசம்பர் 2008 ல், “அந்நாட்டின் முறைகேடான வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தாது எனத் தடாலடியாய் அறிவித்தார். அந்தப் பிரகடனம் அர்ஜென்டீனா மற்றும் பராகுவே ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகளைவிட எக்குவடோர் கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடு எனும் அவப் பெயரைத் தேடித் தந்தது. எண்ணை ஏற்றுமதி உறுப்பு நாடான ஈக்வேடார், அந்தக் கால கட்டத்தில், சீரான வளர்ச்சியைக் கண்டது.

வேறெந்த தென் அமெரிக்க நாட்டை விடவும் அதிகமாய், ஈக்வேடார், தன் பொதுத்துறை முதலீட்டை அதிகரித்தது. அதன் மூலம், சுமார் 10 சதவிகிதம் வறுமை கட்டுப்படுத்தப் பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து தன் கடன்களைத் திருப்பிச் செலுத்துவும் துவங்கியதுடன் அரசின் செலவையும் குறைத்தார். அதற்காக ஐஎம்எஃப். இடமிருந்து கோரியா பாராட்டுதல்களைப் பெற்றார். பொலிவியாவின் இவோ மோரல்ஸ் போலில்லாமல், கோரியா (குறைந்தபட்சம் தற்போதைக்கு) கால வரையறைகளுக்கு மதிப்பளிக்கத் துவங்கிவிட்டார். சென்ற வார இறுதியில், எக்குவடோர் தேர்தலைச் சந்தித்தது.

முன்னாள் துணைத் தலைவர் லெனின் மொரேனோ தேர்தலில், கில்லர்மோ லாசோவை 51-49% வித்தியாசத்தில் தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துள்ளார்.
ஒரு மைய வலது சாரி அரசியல்வாதியும் முன்னாள் வங்கியாளருமான கில்லர்மோ லாசோ தொடர்ந்து தன் பிரச்சாரத்தில் “ எக்குவடோரை தொழில் செய்ய ஏற்றக் கொள்கைகள் கொண்ட நாடாக மாற்றுவேன், வரிகளைக் குறைத்து வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க விரும்புவதாகக் கூறிவந்தார். ஆனால் மொரேனோ ஒரு மெலிந்த இடைவெளியில் லூசோவை தோற்கடித்துள்ளார். லூசோ தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். மோரேனோ எக்குவடோர் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் கூட, அவரது கொள்கைகளை அவர் கவனமுடன் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில், 70% மக்கள், அடுத்த ஆட்சியில், பல முக்கிய மாற்றங்களைக் காண விரும்புவதாகத் தேர்தலின் போது குறிப்பிட்டுவந்தனர்.

முக்கியமான மாற்றங்கள்
எனினும், லத்தீன் அமெரிக்காவின் இடது சாரிகள் அனைத்தையும் இழந்துவிடவில்லை. இந்தத் தலைவர்களால் ஏற்படுத்தப் பட்ட சமூக நலத் திட்டங்கள் அனைத்தும் இந்தத் தலைவர்களை மக்களிடம் அறிமுகப்படுத்திப் பிரபலமாக்கவில்லை எனினும், அந்த்த் திட்டங்கள் மக்களால் போற்றப்படுகின்றன. (நம்மூரில், தலைவரின் படத்தை அச்சிட்டுத் தான் திட்டமே செயல் படுத்தப் படும் . தலைவரின் வருகைக்காகத் திட்டங்கள் காத்திருக்கும் நிலையும் உண்டு). எனினும், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்னர்,                                                                       இடது சாரி தலைவர் ஆண்ட்ரெஷ் மானுவல் லோபஸ் ஒப்ரேடர் (Andres Manuel Lopez Obrador) அடுத்த ஆண்டு மெக்ஸிக்கோ நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு உருவாகி உள்ளது. அப்படி வெற்றி பெற்றால், 30 ஆண்டுகளில் மெக்சிகோ நாட்டின் முதல் இடது சாரி தலைவராக வருவார். வாழ்க்கை ஒரு சுழலும் சக்கரம்.

ஊழலைத் தாண்டி மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வந்த தலைவர்கள் தேர்தலைத் தாண்டு மக்களின் மனதில் வாழ்வர். கலைஞர் ஜெயலலிதாவை மக்கள் அப்படித் தான் நினைவு கூர்கின்றனர். எனவே சிவப்பில் படிந்த கருப்பு கறை மறைந்து சிவப்புக் கொடி உயரப் பறக்க வேண்டும் என்பதே முற்போக்காளர்களின் எதிர்பார்ப்பு.

More articles

Latest article