டில்லி

வெளிநாடு வாழ் இந்தியரின் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய சேமிப்பு திட்டங்களின் விதிமுறைகளை மாற்றி இன்று அரசு செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.    இந்த புதிய விதிமுறைகள்  பிராவிடண்ட் ஃபண்ட் உட்பட அனைத்து தேசிய சேமிப்பு திட்டங்களுக்கும் பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் படி, கணக்கு முடியும் தேதி வரை வட்டி வழங்கப்படும்.   வழங்கப்பட்ட வட்டி விவரங்கள் அரசிதழில் வெளியாகும்.   வெளிநாட்டில் வேலை பார்க்கச் செல்லும் இந்தியர் வெளிநாடு வாழ் இந்தியர் எனக் கருதப்படுவதால் அவர் வெளிநாடு வாழ் இந்தியரான தினத்தில் இருந்து அவருடைய பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கு மூடப்படும்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் அலுவலக சேமிப்புப் பத்திரங்கள், மாதாந்திர வருவாய் திட்டம், மற்றும் எந்த ஒரு அரசு சேமிப்புத் திட்டத்திலும் சேர அனுமதிக்கப்பட மாட்டாது.   இந்த திட்டங்கள் அனைத்துமே இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுகு மட்டுமே செல்லுபடியாகும்.

சென்ற மாதம் பிராவிடண்ட் ஃபண்ட் நிதிக்கான வட்டி விகிதம் மாறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அதை அரசு மாற்றி அமைக்கப்படவில்லை.    இன்று வெளியிட்ட அறிவிப்பிலும் அதைப் பற்றி அரசு தெரிவிக்கவில்லை.